தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பாக அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பக அறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகளை 48 மணி நேரத்தில் அகற்ற அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.