1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (09:23 IST)

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
 
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆசோசனை நடத்தி வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.