திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:18 IST)

வால்பாறையில் வரையாடுகளுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது!

valparai
தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமான உள்ளது வால்பாறை.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வழியே ஆழியாறு தாண்டி வால்பாறைக்குச் செல்ல 40 க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றனர்.

இங்கு, தமிழ் நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள், யனைகள், மான்கள், குரங்கள் எனப் பல்வேறு விலங்குகள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில்  நின்று புகைப்படம், வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி  வால்பாறை நோக்கிச் சென்ற ராஜா, ஜோபி ஆபிரகாம் ஆகிய 2 பேர் அங்குள்ள வரையாடுகளை துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த வனத்துறையினர் வரையாடுகளை துன்புறுத்தியதை உறுதி செய்து அவர்களை வனப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.