கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது!
கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் திடீரென கார் வெடிகுண்டு வெடித்தது என்பதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த சம்பவம் தீவிரவாதிகளின் கைவரிசை என பாஜக கூறிய நிலையில் தமிழக அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
Edited by Siva