டைமிங்ல கரெக்டா இருப்போம்! – நேரம் தவறாத டாப் 20 விமான நிலையங்களில் கோவை!
உலக அளவில் பல்வேறு நாடுகளில் விமான நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் நேரம் தவறாத டாப் 20 விமான நிலையங்களில் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது.
உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் குறித்து ஓஏஜி எனப்படும் Official Airline Guide நிறுவனம் பட்டியலிட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது உலக அளவில் நேரம் தவறாமல் சரியாக விமானங்களை இயக்கும் டாப் 20 விமான நிலையங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்திய விமான நிலைய ஆணையத்தால் இயக்கப்படும் கோவை விமான நிலையம் இந்த பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளது. 91.45 சதவீதம் சரியாக விமானங்களை இயக்கிய ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதல் இடத்தை பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் டாப் 10 விமான நிலையங்களில் கோவை விமான நிலையம் 10வது இடத்தில் உள்ளது.
அதேபோல நேரம் தவறாக டாப் விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் பிரபல விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம் 15வது இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேஷியாவின் கருடா இந்தோனேஷியா விமான நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K