செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 27 நவம்பர் 2021 (14:50 IST)

48 மணி நேரம் கெடு... சென்னைக்கு ரெட் அலர்ட்!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. 
 
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குமரிக்கடல் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதோடு ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.