ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (16:35 IST)

19 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய விமானம்.. புதுவையில் அறிமுகம் செய்ய திட்டம்..!

flight
19 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய விமானம்.. புதுவையில் அறிமுகம் செய்ய திட்டம்..!
வெறும் 19 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்தை புதுவையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. புதுவையில் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், புதுவையில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் புதுவையில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சிறிய ரக விமானத்தை அறிமுகம் செய்ய மத்திய விமானத்துறை திட்டமிட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது. இது குறித்து ஆய்வு பணிகளுக்காக செக் குடியரசு நாட்டில் இருந்து சிறிய ரக விமானம் வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமானம் புதுச்சேரி வந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 
சோதனைக்கு பண்ண புதுவையில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சிறியதாக விமான சேவை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
இதனால் புதுவையில் இருந்து சென்னை உள்பட பல நகரங்களுக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited  by Mahendran