ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:43 IST)

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Flights
சென்னையிலிருந்து ஏற்கனவே பல வெளிநாடுகளுக்கு நேரடியாக விமான சேவை இருந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
சென்னையில் இருந்து பாரிஸ், பிராங்பர்ட், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய பல சர்வதேச நகரங்களுக்கு புதிதாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கோடை காலத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து நேரடியாக வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva