வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (09:02 IST)

கும்பகோணம் தனியார் பள்ளியில் மேலும் 4 பேருக்கு கொரோனா!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் பள்ளியில் 4 பேருக்கு கொரோனா உறுதி!
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் பள்ளியில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 ஆசிரியர்கள், ஒரு மாணவர் என மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை பாதிக்கப்பட்ட 225 பேரில் 120 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.