1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 1655 COVID19 positive cases reported in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 1655 பேர்களுக்கு கொரோனா!

தமிழகம்
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1655 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 769,995 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1655 பேர்களில் 489 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 11605 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 2010 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 745,848 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 70139 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 112,55,058 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
அடுத்த கட்டுரையில்
கண்ணாடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்பதா? அமித்ஷாவுக்கு முக ஸ்டாலின் பதிலடி