நான் தேடிய வாய்ப்பு என்னைத் தேடி வந்தது – இயக்குனரான கதையை சொன்ன சமுத்திரக்கனி!

Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:50 IST)

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி தான் எப்படி நடிகராகவும் இயக்குனராகவும் ஆனேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் சமுத்திரக்கனி. அவர் இயக்கும் படத்தில் பிரச்சாரத்தொனி அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவர் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தான் எப்படி நடிகராகவும் இயக்குனராகவும் ஆனேன் என்பதைப் பற்றி கூறியுள்ளார்.

அதில் ‘நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலையும் போது முகத்துக்கு நேராக நன்றாக பேசிவிட்டு முகத்துக்குப் பின்னர் இவன் எல்லாம் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பானா இல்லையா எனப் பேசுவார்கள். ஒரு கட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றலாம் என்று முடிவு செய்து சுந்தர் கே,விஜயனிடமும் பாலச்சந்தரிடமும் பணியாற்றினேன். நெறஞ்ச மனசு’ படம் இயக்கி முடித்தேன்.
அது தோல்வி அடைந்ததால் ‘பருத்தி வீரன்’ மீண்டும் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இரண்டு படங்கள் இயக்கிவிட்டு இங்கே வந்து வேலை செய்கிறாயே? என அமீர் கேட்டார். முதலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினக்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.

அதன் பின்னர் சீரியல்கள் வாய்ப்பு வந்து அதில் பிஸியாக இருந்தேன். அப்போதுதான் சசிக்குமார் வந்து சுப்ரமண்யபுரம் படத்தில் நடிக்க அழைத்தார். நான் இயக்கிக் கொண்டிருந்த மூன்று மெகா சீரியல்களையும் வேறு நபர்களிடம் ஒப்படைத்து விட்டு நடிக்க வந்தேன். அப்படித்தான்சுப்ரமணியபுரம்
வாய்ப்பு கிடைத்தது.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :