திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (16:01 IST)

டிக் டாக்கால் அப்பாவான 16 வயது சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்

டிக் டாக் செயலியின் மூலம், 16 வயது மாணவன், அப்பாவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் செயலி  உலகளவில் பல இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் தொழிற்பயிற்சி மையத்தில், தேனியைச் சேர்ந்த 16 வயது மாணவன் படித்து வந்தார். அப்போது டிக் டாக் செயலி மீது மாணவனுக்கு மோகம் அதிகரித்துள்ளது. இதனால் டிக்டாக் வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வந்தார்.

தீடிரென கடந்த வருடம் சிறுவன் காணாமல் போயுள்ளார். இதை தொடர்ந்து சிறுவனின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். ஆனால் பத்து மாதங்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்பு, சிறுவன் ஊத்துக்குளியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனே அந்த சிறுவனின் பெற்றோர், மற்றும் போலீஸார் ஆகியோர் ஊத்துக்குளிக்கு விரைந்தனர். அங்கே சென்றபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது.

டிக் டாக் செயலி மூலம் சிறுவனும், ஒரு செவிலியரும் நட்பாக பழக ஆரம்பித்து பின்பு காதலாக மாறியுள்ளது. அதன் பின் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊத்துகுளியில் குடும்பம் நடத்தியுள்ளனர். மேலும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதால் சிறுவனின் பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.