செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (13:09 IST)

5,500 அமமுகவினரை வலைத்து போட்ட ஓபிஎஸ்: டம்மியான தங்க தமிழ்செல்வன்!

அமமுகவை சேர்ந்த 5,500-த்துக்கும் மேற்பட்டடோர் தேனியில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தேனியில் செல்வாக்கு மிகுந்த நபர்களாக இருப்பவர்கள் அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் திமுகவை சேர்ந்த தங்க தமிழ்செல்வன். ஆனால், தங்க தமிழ்செல்வனை ஓவர் டேக் செய்து அதிமுகவின் பலத்தை தேனி தொகுதியில் கூட்டி வருகிறார் ஓபிஎஸ். 
 
ஆம், சமீபத்தில் முக்கிய புள்ளிகள் உட்பட 5,500-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஓபிஎஸ் முன்னிலையில் இணைந்துள்ளனர். இதன் மூலம் தேனியில் தனது கெத்தை காட்டியுள்ளார் ஓபிஎஸ். 
ஆனால் அமமுகவில் இருந்த விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வனோ தேனியில் திமுகவுக்கு ஆதரவாக பலத்தை நிரூபிக்கும் அளவிற்கு எந்த ஒரு செயல்பாடுகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்த போது அமமுகவில் இருந்து பலரை திமுக பக்கம் கொண்டு வருவார் என எதிர்பார்த்தது எல்லாம் வீணாகியுள்ளது. 
ஆனால், ஓபன்னீர் செல்வத்தின் செல்வாக்கு தேனியில் நாளுக்கு நாள் கூடுக்கொண்டே வருகிறது. அதன் பிரதிபலிப்புதான் முன்னாள் எம்எல்ஏ ராமராஜ், கடமலை மயிலை தர்மராஜ், கூடலூர் அருண்குமார், கம்பம் ஞானசேகர், ஆண்டிபட்டி பொன்முருகன், தேனி ஒன்றியம் பெரியசாமி, பெரியகுளம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளது என தெரிகிறது.