வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:24 IST)

நைட்டில் கொட்டும் மழை... வானிலை ரீபோர்ட்!!

அடுத்த 2 - 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்.
 
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகியவையே அந்த மாவட்டங்கள். 
 
அதோடு, சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.