வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (12:07 IST)

காட்டில் பிணமாகக் கிடந்த சிறுவன் – கொலை வழக்கில் முக்கியத் திருப்பம் !

விழுப்புரம் அருகே காட்டுக்கு விளையாட சென்ற சிறுவன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட கொலையில் அவனது அண்ணன்தான் அந்தக் கொலையை செய்துள்ளான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 


விழுப்புரம் மாவட்டம் ஐயன்குஞ்சரம் பகுதியைச் சேர்ந்த கேசவன். இவர் வேலைக் காரணமாக வெளிநாட்டில் உள்ளார். இவருக்கு பராசக்தி என்ற மனைவியும் சிவகுமார் என்ற 15 வயது மகனும் உள்ளனர்.  மனைவி மற்றும் மகன் இருவரும் ஐயன்குஞ்சரம் பகுதியில் வசித்து வருகின்றனர். சிவக்குமார் அங்கு உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்புப் படிக்கிறார்.

வழக்கம்போல ஜூலை 30 ஆம் தேதி காட்டுக்கு விளையாடச் சென்ற சிவகுமார் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த தாய் பராசக்தி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஊர் முழுவதும் தேட ஆரம்பித்துள்ளார். வெகுநேரத்துக்குப் பிறகு நடுக்காட்டில் அவரது உடல் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

அவரது பிணத்தைச் சுற்றி நிறைய ஆணுறைகள் கிடந்துள்ளது. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் ஆண்கள் பெண்களைக் கூட்டி வந்து பாலியல் உறவுக் கொள்வது வாடிக்கை என்றும் அதைப் பார்த்துவிட்ட சிறுவனை யாராவது இப்படிக் கொன்றிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் அடுத்தக்கட்டமாக மோப்பநாய்க் கொண்டு போலிஸார் அந்தப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டபோது மோப்ப நாய் சிவக்குமாரின் அண்ணன் சாந்தகுமார் வீட்டில் குரைத்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டில் உள்ள சாந்தகுமார் உள்ளிட்டோரிடம் போலிஸார் விசாரணை நடத்த சாந்தகுமார் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் தனக்கும் சிவக்குமாருக்கும் அடிக்கடி சண்டை வருவதால் முயல் வேட்டைக்குப் போவதுபோல அழைத்து சென்று அவனைக் கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.