திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:43 IST)

10 மாத குழந்தையைக் கொன்ற தாத்தா – பொள்ளாச்சியில் பயங்கரம் !

பொள்ளாச்சி அருகே தனது 10 மாதக் குழந்தையைத் தாத்தாவே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த செல்வ ராஜ் .  இவரின் முதல் மனைவி இறந்துவிடவே இரண்டாவதாக சக்திகனி என்பவரை திருமணம் செய்துள்ளார். செல்வராஜின் முதல் மனைவிக்கு குமார் என்ற மகன் உள்ளார். குமார், அவரது மனைவி முத்துமாலை மற்றும் அவர்களது 10 மாதக்குழந்தை ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வராஜுக்கும் அவரது மனைவி சக்திகணிக்கும் தகராறு ஏற்பட்டு அவர் கோபித்துகொண்டு தனது உறவினர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது வீட்டுக்கு சென்று சக்தியை அழைத்தபோதும் அவர் வர மறுத்துள்ளார். இதையடுத்து தனது மகனின் வீட்டுக்கு சென்ற செல்வராஜ் மருமகளிடம் ‘உங்களால்தான் என் மனைவி என்னைவிட்டு சென்றுவிட்டள். அவளை என்னோடு சேர்த்துவைத்துவிட்டு உங்கள் குழந்தையை வாங்கிக்கொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டுக் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து கிணத்துக்கடவு போலிஸாரிடம் அவர்கள் புகார் கொடுக்க, ரயில்நிலையத்துக்கு அருகில் சுற்றி திரிந்த செல்வராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையைக் கொலை செய்து, ஒத்தக்கால்மண்டபம் ஒரு புதரில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். அவர் சொன்ன இடத்தில் சென்று பார்த்த போது  ரத்த காயங்களுடன் கிடந்த தர்ஷினியின் உடலைப் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.