திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (21:13 IST)

மாணவி தற்கொலை செய்ய நீட் தேர்வே காரணம் : உறவினர்கள் குற்றச்சாட்டு

பெரம்பலூர் அருகே தீரன் என்ற கிராமத்தை சேர்நவர் செல்வராஜ் - சுசிலா ஆகியோரின் மகள் கீர்த்தனா. இவர் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தார். அந்தப் பொதுத்தேர்வில் அவர் 1056 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நீட் தேர்வு பயிற்சி மையத்தி சேர்ந்து பயிற்சி பெற்றுவந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற நீர் தேர்வில் 352 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது. அதனால்   கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது பெற்றோர் வெளியில் சென்ற சமயத்தில் வீட்டில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.