வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (09:40 IST)

விடுதலை 2 படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்…!

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இப்போது அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.

படத்தில் முதல் பாகத்தில் இடம்பெறாத சில கதாபாத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகளும் படத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும், சமீபத்தில் அவர் திண்டுக்கல்லில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மஞ்சு வாரியர் ஏற்கனவே வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.