10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள்: பட்ஜெட் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன்..!
10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக பட்ஜெட் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது எனவும், முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும், திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன எனவும், நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கூறிய நிதியமைச்சர் சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம் என்றும், 2024-ல் புதிய இந்தியாவை படைப்போம் என்றும் ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம் என்றும் கூறினார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
Edited by Mahendran