1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:58 IST)

பட்ஜெட்டுக்கு முன்பே வரிக்குறைப்பு அறிவிப்பு.. செல்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி..!

cellphone
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதில் பல்வேறு வரி சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே  செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

செல்போன் தயார்பில் பயன்படுத்தப்படும் பேட்டரி கவர், முன்பக்க, நடுப்பக்க, பின்பக்க கவர், லென்ஸ், ஸ்குரு, சிம் சாக்கெட் உள்ளிட்ட சில பொருள்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் இது குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளதை அடுத்து உடனே இது அமலுக்கு வருகிறது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே மத்திய அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதை அடுத்து செல்போன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செல்போன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Edited by Siva