இரண்டு மாதம் 144 தடை உத்தரவு: ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு

Last Modified சனி, 8 செப்டம்பர் 2018 (20:23 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் அதாவது 9.9.2018 முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிப்பு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும்
நாளை முதல் இம்மாதம் 15ஆம் தேதி வரையும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையும் வாடகை வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :