வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 18 ஜூலை 2018 (19:12 IST)

சித்தம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருந்துகள் என்றால் என்ன? பாடம் நடத்திய கரூர் மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களுக்கு இலவச குடும்ப நல சித்த மருத்துவ முகாம் மற்றும் புதிய சித்த மருத்துவப்பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நிகழ்ச்சி சிறப்புரையாற்றும் போது, எப்படி பால் என்றால் ஆவின் பால் என்று நினைவிற்கு வருகின்றதோ, அதே போல் தான்., டேம்கால் என்றதோடு., ஆகவே, இந்த குடும்ப நல சித்த மருத்துவ முகாமில் நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய்  மூட்டுவலிகள்  இதய நோய்கள் ஆஸ்துமா  சொரியாசிஸ்  கருப்பைகட்டி சினைப்பை நீர்கட்டி பித்தப்பை கற்கள்  சிறுநீரக கற்கள்  ஆண்மைக்குறைவு  குழந்தையின்மை தைராய்டு நோய்  மாதாந்திர தீட்டு பிரச்சனை தோல்நோய்கள்  உடல் பருமன்  முடிஉதிர்தல்  பற்சொத்தை போன்ற பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மேலும்  புறசிகிச்சை சித்த மருத்துவப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இப்பிரிவு செயல்படும்.  அனைத்து விதமான நோய்களுக்கும் சித்த மருந்துகள் மற்றும் மூலிகைப்பொருட்களை பயன்படுத்தினால் வாழ்வின் பிற்பகுதியில் பக்கவிளைவுகள் ஏற்படாமல் பாதுகாத்திடலாம்.

சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு பீதியை அளித்த டெங்கு காய்ச்சல் பல்வேறு மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத சூழலில் நிலவேம்பு கசாயமும் பப்பாளி சாறும் நோயை குணப்படுத்தும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டது. மூலிகை பொருட்கள் அடங்கிய கண்காட்சி சித்தமருத்துவப்பிரிவு  இலவச சித்த மருத்துவ முகாம் ஆகியவை மாவட்ட ஆட்சியரகத்தில் 3 நாட்களுக்கு (23.07.2018 25.07.2018 மற்றும் 27.07.2018) நடைபெறவிருக்கின்றது. 

மேலும்  பிரதிவாரம் இம்முகாமனது மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்  புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 தினங்களும் நடைபெறும். இக்கண்காட்சியினை அரசு அலுவலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், அன்பழகன் ஏற்கனவே, அந்த துறையில் இருந்ததினால் தான் என்று சுவாரஸ்யமாக பேசினார்.

பரங்கிபேட்டை சூரணம் இமயமலையிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு, இந்த சூரணம் சாப்பிட்டால் இயற்கையாய் அழகுப்படுத்தும் என்றதோடு, டிரேடினஸனல் மெடிசன் என்றால் மூன்றுவிதமாக சொல்வார்கள் சித்தம், ஆயுர்வேதம், யுனானி ஆகியது. தான் சித்தம் என்றால் சுத்தமான தமிழ் மருத்துவம்,

ஆயுர்வேதம் என்றால் வடமொழிச்சொல்லில் எழுதிய மருத்துவம், யுனானி  முழுமையான உருதுச்சொல்லில் எழுதப்பட்ட மருத்துவம் ஆக, இந்த மூன்றிற்கு என்ன வித்யாசம் என்றால் அந்தந்த இடங்களில் விளைவிக்கப்படும் மருந்துகள் மற்றும் மூலிகைகளை கொண்டு தான்., தயாரிக்கப்படும் என்றதோடு, ஆக மூன்றில் எது பெரியது என்று கூற முடியாது என்றார்.  இவரது மருத்துவம் சார்ந்த அந்த பேச்சு அங்கு சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியது.