ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (17:50 IST)

விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு 24 விதிமுறைகள் - இந்து முன்னணி போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் (பொ) & மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. 

 
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் இந்து முன்னணி திருச்சி கோட்டத்தலைவர் வி.சி.கனகராஜ் தலைமையில், இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 87 மனுக்களை தயாரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். 
 
விநாயகர் சதூர்த்தி வரும் செப்டம்பர் 13ம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில், அந்த விழா கொண்டாடுவதற்கு 244 விதிமுறைகளை அரசு விதித்துள்ளதாகவும், மதசார்பற்ற அரசு மத வழிபாட்டில் தலையிடுவதா ? என்று குற்றம் சாட்டி, மற்ற மதத்தில் தலையிடாமல் குறிப்பாக இந்து மத வழிபாட்டில் மட்டும் தலையிட்டு இந்து வழிபாட்டின் உரிமையை தடுப்பதாக கரூர் மாவட்டம் நடந்து கொள்வதாக கூறி கரூர் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர். 
 
மேலும், இதையடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
 
பேட்டி : வி.சி.கனராஜ் – திருச்சி கோட்டத்தலைவர் – இந்து முன்னணி
-சி.ஆனந்தகுமார்