ஒருவருக்கு வந்தாலும், குடும்பத்தோட 14 நாட்கள் தனிமை: சென்னையின் அதிரடி!
ஒருவருக்கு கொரோனா உறுதியானால் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி.
நேற்று தமிழகத்தில் 3,940 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,940 பேர்களில் 1,939 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53, 762 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஒருவருக்கு கொரோனா உறுதியானால் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா முடிவு வரும் வரை கொரோனா பரிசோதனை செய்த நபர் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இன்று நடந்த மருத்துவ குழு - முதல்வர் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகும் மருத்துவர்கள் கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். சுவை, மணம் தெரியாவிட்டால் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.