புயல் போச்சு.. வெயில் வந்திடுச்சு! 13 இடங்களில் சதமடித்த வெயில்!
தமிழ்நாட்டில் அக்கினி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது.
கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் அக்கினி வெயில் காலம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. எனினும் வங்க கடலில் உருவான மோக்கா புயல் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பநிலை குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் வெப்பநிலை வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடலூர், ஈரோடு, கரூர், பரமத்தி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருத்தணி என 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K