கள்ளச்சாராயம் பலி 7-ஆக உயர்வு! மரக்காணத்தில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாரயம் அருந்தியதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற பகுதியை சேர்ந்த மரக்காணம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து தனது இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கள்ள சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K