செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (09:28 IST)

தடுப்பூசி போடுறதுல ரொம்ப மெத்தனம்! 13 மாவட்டங்களால் அதிருப்தி! – தலைமை செயலர் கடிதம்!

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானொருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவரிசையில் அதிகமாக தடுப்பூசி போடப்பட்ட பகுதிகள் பட்டியலில் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி ஆகிய 5 நகரங்கள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளன.

அதுபோல தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதிகளாக சிவகாசி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என தலைமை செயலர் கடிதம் எழுதி அறிவுறுத்தியுள்ளார்.