தொடர்புடைய செய்திகள்
- சுட்டெரிக்கும் கோடை வெயில்.! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்..!
- கடும் வெயிலால் பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்.. கோடை விடுமுறை நீட்டிப்பு..!
- நாளை முதல் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- வெயிலோட உக்கிரம் தாங்க முடியல.. நிழல் ஏற்படுத்த அகமதாபாத் மாநகராட்சி செய்த பலே செயல்!
- வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கும் சென்னை மக்கள்.. நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!
வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.. சென்னையில் சோகம்..!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் 12ம் வகுப்பு மாணவன் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத அளவுக்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததை அடுத்து பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12-ம் வகுப்பு சக்தி என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
இதய நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்த தனது நண்பர் ஹரிசுதன் என்ற சக மாணவனின் உடலை பார்க்கச் சென்றபோது சக்தி வெயிலின் தாக்கம் தாங்காமல் மயங்கி விழுந்து உள்ளதாகவும் இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு பிறவியிலேயே வியர்வை சுரப்பிகள் வேலை செய்யாமல் இருந்ததாகவும் மற்ற இணை பாதிப்பு இருந்ததாகவும் அதுவும் உயிரிழந்ததற்கு காரணம் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
