தொடர்புடைய செய்திகள்
- 10 மாதங்களாகியும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் ஏன் வெளிவரவில்லை: அன்புமணி கேள்வி
- தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்.. நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபரின் தந்தை..!
- நெட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு வாய்ப்பு.. யுஜிசி அறிவிப்பு
- சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? தேதிகள் அறிவிப்பு!
- ராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!
காப்பி அடித்ததாக கண்டித்த ஆசிரியர்கள்.. 12ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
தேர்வில் காப்பி அடித்ததாக 12ம் வகுப்பு மாணவியை 5 ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த அந்த மாணவி வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஐந்து ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிய போது அவருக்கு காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து டிசி பெற்றுக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டுக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
