1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2023 (17:15 IST)

ராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும்  சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதை பார்த்தோம். தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திற்கு பஜன்லால் சர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 
 
ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் வசுந்தா ராஜேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில்  ஜெய்ப்பூரில் நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். 
 
வசுந்தரா ராஜேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அடுத்து அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva