ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (18:12 IST)

12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் வினாத்தாள் மீண்டும் லீக்!

12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் வினாத்தாள் மீண்டும் லீக்!
நாளை பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்தின் திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இன்று அந்த வினாத்தாள் லீக் ஆகி உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே முதல் கட்ட திருப்புதல் தேர்வின் போது அடுத்தடுத்த இணையதளங்களில் வினாத்தாள் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்  இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வின் போதும் வினாத்தாள் கசிந்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த வினாத்தாள்கள் கசிந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்