12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு!
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதி என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
மேலும் செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் மதிப்பெண் பட்டியலை மாநில அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் மே 14 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது