திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:01 IST)

கொரோனா இரண்டாவது அலை; மக்களுக்கு உதவி தேவை! – உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கழகத்தினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வீரியமடைய தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்களுக்கு கொரோனா தொடர்பான விழுப்புணர்வை ஏற்படுத்த கட்சி உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் இயக்கம்தான் திமுக. கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது திமுக “ஒன்றிணைவோம் வா” என்னும் செயல்பாட்டின் கீழ் கட்சி பாகுபாடின்றி அனைவரும் உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட தேவைகளை திமுக நிறைவேற்றியது. அதுபோல தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள இந்த சூழலில் திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும். கோடைகாலத்தில் மக்கள் தாகம் போக்க நீர் பந்தல் அமைப்பதுடன் மக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க், சானிட்டைசர் வழங்கவும், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ”ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே” என அழைப்பு விடுத்துள்ளார்.