திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (09:54 IST)

சமூக நீதியை விதைத்த பேரறிஞர்! – அண்ணா பிறந்தநாளில் எடப்பாடியார் ட்வீட்!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று தமிழக முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாள் குறித்து பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” நம் கழகத்தின் முதல் பெயர், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர், சமூக நீதியை மேடை பேச்சிலிருந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அவர்களின் 113ஆம் பிறந்த நாளில் “ #அண்ணா நாமம் வாழ்க” என்று வணங்கி போற்றுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.