தொடர்புடைய செய்திகள்
- மின் விநியோகம் நிறுத்தம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
- ‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை - பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
- மிக்ஜாம்’ புயல் சென்னையை கடக்கும்போது நிலைமை எப்படி இருக்குமோ- ஓபிஎஸ்
- சென்னை மக்கள் மழை பற்றிய புகார்களுக்கு அழைக்கலாம்-வாட்ஸ் ஆப் எண் அறிவித்த முதல்வர்
- "திமுக மாடல் ரோடு", - விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி" - எடப்பாடி பழனிசாமி
120 கிமீ வடக்கு திசையில் மிக்ஜாம் புயல் ..மழை குறையுமா? வானிலை மையம் தகவல்
சென்னையில் இருந்து 120 கிமீ வடக்கு திசையில் மிக்ஜாம் புயல் விலகிச் சென்றதாகவும் இன்று நள்ளிரவுக்குப் பின் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் வெள்ளக்காடான சென்னை மக்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் மேலும் 7 அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை தாம்பரம், ஆவடி, ஆகிய மா நகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கு என கூடுதலால ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னையில் மொத்தம் 380 இடங்களில் தண்ணீர் சூழ்ந்திருந்த நிலையில், தண்ணீரை அகற்ற 990 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கீழே விழுந்த 24 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
