வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (14:00 IST)

11ம் வகுப்பு ரிசல்ட் ;12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு! – பள்ளிக்கல்வித்துறை

12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் அட்மிசன் பணிகள் தொடங்ங்கியுள்ளன. அதை தொடர்ந்து தற்போது 11ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஜூலை 31) அன்று வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 12ம் வகுப்பிற்கான தேர்வு எழுதாதவர்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் 31ம் தேதி அன்றே வெளியாவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.