1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (21:30 IST)

113 ஆண்டுகள் இல்லாத அளவு தமிழகத்தில் மழை ! வானிலை மையம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்புக்கு மாறாக அதிகளவில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் 40 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த மழையின் அளவு என்பது கடந்தாண்டைவிட 88% அதிகம் என்று தெரிவித்துள்ளது.

கட்ந்த 1906 ஆம் ஆண்டில் 112 சென்டி மீ மழையும், 1909 ஆம் ஆண்டில் 127 சென்டி மீட்டர் மழையும், பதிவானதாகவும், கடந்த 113 ஆண்டு கால வரலாற்றில் தற்போது பெய்துள்ள 93 சென்டி மீட்டர் மழை தான் அதிகளவு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கும் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.