செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (17:59 IST)

முன்கூட்டியே தொடங்கவுள்ள தென்மேற்குப் பருவமழை- வானிலை மையம்

நாளை முதல்  தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மழை தென் மாநிலங்களில் மட்டும் இல்லாமல் வட மாநிலங்களிலும் பெய்யும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், வருஇம் 27 ஆம்தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வரும் 27 ஆம் தேதிக்குப் பதில்  நான்கு நாள் முன்னதாக 23 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.