வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:35 IST)

ஒரே விமானத்தில் வந்த 113 கடத்தல்காரர்கள்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Flight
ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 113 கடத்தல்காரர்கள் தங்கம் ஐபோன் உள்ளிட்ட பல பொருள்களை கடத்தி வந்த நிலையில் அனைத்து பொருட்களையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஓமன் நாட்டில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் 113 கடத்தல்காரர்கள் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
அவர்களிடமிருந்து 13 கிலோ தங்கம், 120 ஐ ஃபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட்டுகள் பதப்படுத்தப்பட்ட குங்கும பூ உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். 
 
ஒரே விமானத்தில் கடத்தலில் ஈடுபட்ட 113 பேரிடமும் பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தற்போது அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva