திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:33 IST)

பறக்கும் விமானத்தில் மாரடைப்பு.. ஓமனில் இருந்து சென்னை வந்த வாலிபர் பரிதாப மரணம்..!

Flight
ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் பறக்கும் விமானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஓமன் நாட்டில் இருந்து 163 பயணிகளுடன் சென்னைக்கு ஒரு விமானம் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் இருக்கையில் மயங்கிய நிலையில் இருந்தார். 
 
இதனை அடுத்து விமான ஊழியர்கள் மருத்துவர் குழுவுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது 
 
ஓமன் நாட்டில் இருந்து விடுமுறை சொந்த ஊருக்கு தனசேகர் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran