புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (16:04 IST)

10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
 
நவம்பர் 19 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்றும் தேர்வு முடிவுகளை தேர்வு எழுதியவர்கள் ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வர்களின் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது