வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:13 IST)

முதல்முறையாக பள்ளிக்கல்வித்துறை எடுத்த முக்கிய முடிவு!

முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக இந்த இடமாற்றம் கவுன்சிலிங் தற்போது நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை வகுப்பு 4 இன் கீழ் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி அன்று பிற்பகல் ஐந்து மணி அளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 
மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்து பணியிடங்கள் காலி பணியிடமாக கருதப்பட்டு அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.