1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (07:44 IST)

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது?

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த தனி தேர்வுகளுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது என்றும் இந்த ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

மேலும் அறிவியல் பாட செய்முறை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் தங்களுக்கு பயிற்சி பெற்ற பள்ளிகளில் செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை தனி தேர்வுகள் நேரில் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் எனவே உரிய வழிமுறைகளை பின்பற்றி தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்றும் துணை தேர்வுக்கான கால அட்டவணை அதே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva