வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (10:12 IST)

பொது தேர்வுக்கு ரெடியா மாணவர்களே..! இன்று ஹால் டிக்கெட் வெளியீடு..!!

Student Exam
12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், அதே போல் 11ம் வகுப்பிற்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது. 
 
பொதுத் தேர்வு தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இன்று முதல் ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
12 Two exam
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளின் ஹால் டிக்கெட்களை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுத உள்ளவர்கள், நேற்று (பிப். 19) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
மேலும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டுத் தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது