வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2023 (08:11 IST)

நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடக்கம்! கல்வியாளர்கள் வாழ்த்து..!

பிளஸ் டூ பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து தேர்வுகளை நன்றாக எழுத கல்வியாளர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள் என தேர்வு துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவ மாணவிகள் மட்டும் இன்றி சிறை கைதிகள் 264 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களில் 13,151 பேர் மாற்றுத்திறனாளிகள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு வசதியாக 4000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
பத்தாம் வகுப்பு தேர்வுகளை மாணவ மாணவிகள் சிறப்பாக எழுதி சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளுமாறு கல்வியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva