வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (14:56 IST)

10 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

Dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், 10 வது வகுப்பு மட்டுமே படித்த முடித்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

போலி  மருத்துவம் பார்ப்பதற்கு மக்களிடம் பணமும் வசூலித்து வந்துள்ளதாகக் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, அங்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர்.

அங்கு,அவரிடம் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, போலீஸார் போலி மருத்துவர் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.