1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (10:34 IST)

ஹன்சிகா நடித்துள்ள காந்தாரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு திரை எழுத்தாளர் மா தொல்காப்பியன் கதை எழுத, தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.