1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (14:39 IST)

கைதான பாஜக நிர்வாகி உமா கார்க்கியை காவலில் விசாரிக்க அனுமதி..!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக பாஜக நிர்வாகி உமா கார்கி என்பவரை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி உமா கார்கி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க சைபர் கிரைம் போலீசுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
பெரியார் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக ஆதரவாளர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva