வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (21:00 IST)

பட்டாசு குடோனில் வெடி விபத்து…11 பேர் பலி

karnataka
கர்நாடகம் மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

கர்நாடகம் மாநிலத்தில்  முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

எதிர்பாராது நடந்த இந்த வெடிவிபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.  இப்பகுதியில் ஒரு கடையில் பிடித்த தீ, அருகில் உள்ள பட்டாசு கடைகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தில், உயிரிழந்த 11 பேரும் தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.