வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2022 (08:17 IST)

சென்னையில் 1000 பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்பு: சென்னை மாநகராட்சி திட்டம்

Chennai Corporation
சென்னையில் உள்ள ஆயிரம் பேருந்து நிறுத்தங்களில் சீர்திருத்தம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ஆயிரம் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கவும் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது
 
பராமரிப்பு காலம் முடிந்த 65 பேருந்து நிறுத்தங்கள், மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ள 779 பேருந்து நிறுத்தங்கள், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 156 பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட ஆயிரம் பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் பயன்படுத்த மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
சென்னையில் உள்ள பல பேருந்து நிறுத்தங்கள் மோசமான நிலையில் உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி இதன் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva